search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன விபத்து"

    தேனி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). கூலித் தொழிலாளி. கூடலூர் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ்நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் சீனிவாசன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே உத்தமபாளையம் ராயப்பன் பட்டியைச் சேர்ந்தவர் ராசு (வயது 57). சம்பவத்தன்று அணைப்பட்டி - ராயப்பன்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ராசு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உடன்குடியில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மாட்டு வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    உடன்குடி:

    திசையன்விளை அருகே உள்ள அணைக்கரையை சேர்ந்தவர் மூக்காண்டி (எ) முத்துராமலிங்கம் (வயது 56). மாடு வியாபாரம் செய்து வந்தார். 

    இந்நிலையில் நேற்று இரவு இவர் தனது மொபட்டில் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றார். பின்னர் இரவில் அங்கு தங்கி விட்டு இன்று அதிகாலை மீண்டும் குலசேகரன்பட்டிணம்- உடன்குடி வழியாக திசையன்விளைக்கு சென்றார். திசையன்விளை மெயின் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இது குறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டிணம் இன்ஸ்பெக்டர் ராஜபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மூக்காண்டி (எ) முத்துராமலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

     இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

    வாலாஜா:

    ஆற்காடு அருகே உள்ள வளவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 51). இவர் மாந்தாங்கலில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    முருகானந்தம் நேற்று இரவு வேலைக்கு ஷேர் ஆட்டோ மூலம் மாந்தாங்கலுக்கு சென்றார். அங்கு ஆட்டோவில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகானந்தம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது வாகனம் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து வருவாய் ஆய்வாளர் ராஜா கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாகன விபத்தில் பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் அருகே அடுத்தடுத்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த நெய்காரப்பட்டி அருகே உள்ள மலங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது 55). தறி தொழிலாளி. இன்று காலை சேலம்-சங்ககிரி சாலை மெயின்ரோட்டில் உள்ள மூங்கில் முனியப்பன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மகன் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தார். பழனியப்பனுக்கு பழனியம்மாள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

    சேலம் காகாபாளையம் அருகே உள்ள கனககிரி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்(63). கூலி தொழிலாளி. நேற்று மாலை சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளி அருகே சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் தங்கராஜ்(35) கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 70)இன்று அதிகாலை விண்ணமங்கலம் தேசிய நெஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் வள்ளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×